fbpx

ஜூன் 14ம் தேதி வரை மட்டுமே இலவசம்! உடனே ஆதார் கார்டை அப்டேட் செய்யுங்கள்!

ஆதார் நிர்வாகக் குழுவான UIDAI, மக்கள் தங்கள் ஆதார் விவரங்களை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் புதுப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இந்திய மக்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை ஜூன் 14ம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ள அவகாசம் அளித்துள்ளது. முன்னதாக ஆதாரை புதுப்பிக்க ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஜூன் 14 வரை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் 14-ம் தேதிக்குப் பிறகு எப்போதும் போல கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் புகைப்படம், கருவிழி அல்லது பிற பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டுமானால், ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஆதார் நிர்வாகக் குழுவான UIDAI மக்கள் தங்கள் ஆதார் விவரங்களை ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் குழந்தைக்கு 15 வயதாகும்போது அனைத்து பயோமெட்ரிக்ஸ் விவரங்களையும் புதுப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Baskar

Next Post

கோவையில் ராட்சத விளம்பர பலகை சரிந்து விழுந்து 3 இளைஞர்கள் பரிதாப பலி!!

Thu Jun 1 , 2023
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சாலையோரத்தில் ராட்சத விளம்பர பலகை வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று அந்த விளம்பர பலகை திடீரென சரிந்து விழுந்தது. இதில் சிக்கி 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். விளம்பர பலகை கட்டும் பணியின் போது, அந்த விளம்பர பலகை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.  விளம்பர பலகை சரிந்து […]

You May Like