ஐயப்ப பக்தர்களுக்கு உதவியாக சபரிமலையில், இலவச வைபை வசதியை தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ளது.
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும், மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகின்றது. சபரிமலையில் இதுவரை 25¾ லட்சம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இந்தநிலையில், சபரிமலையில் ஐயப்பக்தர்களுக்கு கட்டணமில்ல வைபை சேவை தொடங்கப்பட்டுள்ளது. பிஎஸ்.என்.எல் மற்றும் தேவசம் போர்டு சார்பில் வைபை சேவையை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக சன்னிதானம், நடைப்பந்தல், திருமுற்றம், மாளிகைப்புறத்தில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இலவச சேவை வைபை தொடங்கி வைக்கப்பட்டதன் மூலம் ஐயப்பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.