சென்னை, கோவை உள்ளிட்ட 7 மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வை-ஃபை சேவை வழங்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்..
2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை இ பட்ஜெட்டாக தாக்கல் செய்து வருகிறார்.. அப்போது பேசிய பல்வேறு துறைகளிலும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்..
2023-24 தமிழக பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் :
- கைத்தறி மேம்பாட்டுக்கு ரூ.20 கோடியில், 10 சிறிய கைத்தறி பூங்காக்கள் நிறுவப்படும்.
- சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வை-ஃபை சேவைகள் வழங்கப்படும்.
- சென்னை, கோவை, ஓசூரில் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்கள் (TN Tech City) அமைக்கப்படும்
- 7 மாவட்டங்களில் டைடல் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- ரூ.77,000 கோடியில் 15 புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- 16,500 மெகாவாட் மின் திறன் கொண்ட 15 புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
- விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோவையில் ரூ.410 கோடியில் 4 புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் சுமார் 22,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்..
- காற்றாலைகளின் செயல்திறனை மறுசீரமைக்க புதிய கொள்கை வகுக்கப்படும்
- மின் தரவுகளை தானியங்கி முறையில் பெற அனைத்து இணைப்புகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் நிறுவப்படும்.
- கட்டட வரைபடம், மனை வரைபட அனுமதியை இணைய வழியில் பெற இணையதளம் உருவாக்கப்படும்.
- சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட நகரப்புற வசதிகள் கொண்டு வரப்படும்..