கருத்துச் சுதந்திரத்தை இந்துக் கடவுள்களுக்கு வைத்திருக்க முடியாது என சர்ச்சைக்குரிய காளி போஸ்டர் குறித்து பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
காளி என்ற ஆவணப்படத்தை பிரபல இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கி உள்ளார்.. அந்த படத்தின் போஸ்டரில் கையில் எல்ஜிபிடி கொடி, சிகரெட் உடன் காளி கெட் அப்பில் பெண் ஒருவர் இடம்பெற்றது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது… இந்து கடவுளை அவமதிக்கும் வகையிக் இருப்பதாக கூறி பாஜகவினர் இந்த போஸ்டருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. மேலும் லீனா மணிமேகலைக்கு எதிராக பல காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது..
நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் இந்த போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி காளி போஸ்டரை விமர்சித்துள்ளார், மேலும் அம்மன் புகைபிடிப்பதைக் காட்டுவதன் மூலம் கருத்து சுதந்திரத்தை இந்து தெய்வங்களுக்கு வைத்திருக்க முடியாது என்று சுட்டிக்காட்டினார். தனது ட்விட்டர் பக்கத்தில், “கருத்து சுதந்திரத்தை இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களுக்கு வைத்திருக்க முடியாது.. காளி படத்தின் போஸ்டரால் நான் புண்பட்டுள்ளேன், மரியாதை அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.. கருத்து சுதந்திரம் வேண்டுமென்றே பயன்படுத்தும் கருவியாக மாறக்கூடாது..” என்று பதிவிட்டுள்ளார்..
முன்னதாக, காளி போஸ்டர் சர்ச்சை குறித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, தன்னை பொறுத்த வரை, இறைச்சி மற்றும் மதுவை ஏற்கும் தெய்வம் தான் காளி என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…