fbpx

ED அதிரடி…! பொன்முடி, அவரது மகனின் ரூ.14.21 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்து முடக்கம்…!

மணல் குவாரியில் சட்டவிரோதமாக செம்மண் எடுத்த வழக்கில் அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம் சிகாமணியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்து முடங்கி உள்ளது.

கடந்த 2006 -2011 திமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மண் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் கே.எஸ்.ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக திமுக எம்.பி. கவுதம சிகாமணி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது‌. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் மணல் குவாரியில் சட்டவிரோதமாக செம்மண் எடுத்த வழக்கில் அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம் சிகாமணியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்து முடங்கி உள்ளது.

English Summary

Freezing of movable and immovable property worth Rs 14.21 crore of Minister Ponmudi’s son

Vignesh

Next Post

இந்த 2 பொருளும் மகாலட்சுமிக்கு சமம்..!! கண்டபடி போட்டு வைக்காதீங்க..!! வீட்டில் பணம் தங்காது..!!

Sat Jul 27 , 2024
In today's technological age we have left the grinding on the mill and the pounding on the flail.

You May Like