மைக்கேல் பார்னியரை பிரான்ஸ் புதிய பிரதமராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இன்று நியமித்துள்ளதாக எலிஸி அரண்மனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் பிரான்ஸில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டது. இடதுசாரி மக்கள் முன்னணி அதிக இடங்களை வென்றது. ஆனால், முழுமையான பெரும்பான்மைக்கு வரவில்லை. பிரதமரின் கூட்டணிக் கட்சி வேட்பாளரான 37 வயதான லூசி காஸ்டட்டினை அதிபர் இமானுவேல் மேக்ரான் நிராகரித்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த மைக்கேல் பார்னியர் ?
2016 ஆம் ஆண்டில் மைக்கேல் பார்னியர் பிரக்ஸிட் பணிக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 73 வயதான மைக்கேல் பார்னியர் நான்கு முறை கேபினட் அமைச்சராகவும் இரண்டு முறை ஐரோப்பிய ஆணையராக பணியாற்றியுள்ளார். மைக்கேல் பார்னியர் புரூசெல்ஸ் நகரில் மிகவும் பிரபலமானவராக இருந்தாலும், பிரான்ஸ் நகரில் அவ்வளவு பிரபலமானவர் அல்ல. அவர் லெஸ் குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினராவார்.
Read more ; ஹரியானா தேர்தல்.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரஞ்சித் சிங் சவுதாலா..!! என்ன விவகாரம்?