fbpx

அடிக்கடி வரும் எச்சரிக்கை மெசேஜ்..!! உடனே இதை பண்ணுங்க..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

மொபைல் போன் வாங்கவே காசு இல்லை என்ற நிலைமை எல்லாம் தற்போது மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமுமே மொபைல் போன் உள்ளது. குறைந்த விலையில் பல்வேறு அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதால் அவற்றை எளிதாக வாங்கி விடுகின்றனர்.

அதேபோல, ஈஎம்ஐ போன்ற வசதியின் கீழ் ஸ்மார்ட்போன் வாங்க முடிவதால், ஒரு சராசரியான பொருளாக ஸ்மார்ட்போன் மாறிவிட்டது. வெறும் தகவல் தொடர்பு சாதனமாக மட்டுமல்லாமல், பல்வேறு மொபைல் செயலிகள், கேம்கள் என நம்மை ஸ்மார்ட்போனிலேயே கட்டிப் போட்டு வைத்துள்ளன. இதுபோன்ற காரணங்களால் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பல ஸ்டார்ட்போன் பயனர்களுக்கு ‘தீவிர அவசரகால எச்சரிக்கை’ என்ற தலைப்புடன் ஃபிளாஷ் மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இது நாட்டின் அவசரகால எச்சரிக்கை அமைப்பை சோதிக்கும் வகையில் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் செல் பிராட்காஸ்டிங் அமைப்பு மூலம் அனுப்பப்பட்ட மாதிரி எச்சரிக்கை செய்தி ஆகும். இந்தச் செய்தியைப் பார்த்தவர்கள் அதனைப் புறக்கணித்துவிடலாம்.

நிலநடுக்கம், சுனாமி மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கு தயாராக இருக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாகவே இதேபோன்ற சோதனை எச்சரிக்கையைச் செய்தி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

தங்கம் விலை இப்படியே போச்சுனா அவ்வளவு தான்..!! ரூ.45,000 தாண்டிய ஒரு சவரன்..!! இதுதான் காரணமாம்..!!

Fri Oct 20 , 2023
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் […]

You May Like