fbpx

வெள்ளி கிழமையில் 5 ரூபாய் நாணயத்தை வைத்து மகாலட்சுமிக்கு இப்படி வழிபாடு செய்து பாருங்கள்.!?

பொதுவாக வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க தினந்தோறும் பலரும் பரிகாரங்கள் செய்து வழிபட்டு வருகிறோம். நாம் தினந்தோறும் வீட்டில் செய்யும் சிறு சிறு விஷயங்களில் கூட மகாலட்சுமியின் கடாட்சத்தை எளிதாக பெற இயலும். வீட்டில் நேர்மறையான ஆற்றல் பெருகி, வறுமை நீங்கி, லட்சுமி கடாட்சம் அதிகரிக்க வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரம் செய்து பாருங்கள்?

பணம் என்பது இன்று நம்மிடமோ நாளை மற்றொருவரிடமும் என்று மாறிக்கொண்டே இருக்கும் நிலையில்லாத விஷயமாக இருந்து வருகிறது. அப்படியிருக்க இந்த பரிகாரம் செய்யும் போது லட்சுமி கடாட்சம் என்றும் நம்மிடம் இருக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. காலையில் எழுந்தவுடன் எந்த வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்கிறார்களோ அங்கு கடவுள் கண்டிப்பாக வாசம் செய்வார்.

அந்த வகையில் வெள்ளி கிழமையன்று காலை, மாலை என இரு வேளைகளிலும் விளக்கேற்றி பூஜை செய்வது மிக அவசியமான ஒன்றாகும். இதன்படி நாம் பூஜை செய்யும் போது ஐந்து வெற்றிலை மற்றும் பாக்குகள் ஐந்து ரூபாய் நாணயங்கள் சில போன்றவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பூஜை தட்டில் வெற்றிலை அதன் மீது கொட்டைப்பாக்கு மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்கள் வைத்து கற்பூரம் ஏற்றி மகாலட்சுமிக்கு ஆராதனை செய்ய வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்து வந்தால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மேலும் முதல் நாளில் பூஜை செய்யும் போது இருக்கும் வெற்றிலை பாக்கை மாற்றி விட்டு புதிதாக வைத்துக்கொள்ள வேண்டும். ஐந்து ரூபாய் நாணயத்தை அருகில் இருக்கும் கோயில் உண்டியலில் போட வேண்டும். புதிதாக ஒன்றை கற்றுக் கொள்வதற்கு குருவிற்கு எவ்வாறு தட்ஷனை செலுத்துகிறோமோ, அதை போல் தான் கடவுளுக்கும் இந்த ஐந்து ரூபாய் நாணயம் செலுத்துவதாக கருதப்பட்டு வருகிறது.

Rupa

Next Post

FASTag-இல் வந்த அதிரடி மாற்றம்..!! புதிய வங்கியில் பெற அரசு திடீர் உத்தரவு..!!

Fri Feb 16 , 2024
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இருந்து FASTags வாங்குமாறு மக்களை வலியுறுத்தும் வகையில், புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதோடு லிஸ்டில் இருந்து Paytm இன் பெயர் நீக்கப்பட்டுள்ளது. NHAI மொத்தமாக 32 வங்கிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அங்கு பயணிகள் வாகனங்களுக்கு FASTags வாங்கலாம். Paytm FASTagsஐ பெற்றவர்கள் NH நெட்வொர்க்கில் தொந்தரவு இல்லாத பயணத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இருந்து புதிய FASTagsயை வாங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

You May Like