புதுவீடு கட்டி வந்த நண்பனை சக நண்பனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இவர் வீட்டின் மேற்பரப்பில் கூலிங் அட்டை (சீலிங்) அமைப்பதற்காக திண்டுக்கல்லைச் சேர்ந்த 4 இளைஞர்கள் பணிக்கு நேற்றிரவு வந்துள்ளனர். அப்போது திண்டுக்கல்லைச் சேர்ந்த மோகன்ராஜ் (27) என்பவரை விஜயன் (27) இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ளார்.
பின்னர், விஜயன் செய்வது அறியாமல் பக்கத்து வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார். பின்னர், ராசிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோகன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து விஜயனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மோகன்ராஜ் – விஜயன் ஆகிய இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று இரவு ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டு, சக நண்பர்கள் இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் உறங்கிக் கொண்டிருந்தபோது மோகன்ராஜைவை விஜயன் இரும்புராடல் அடித்துக் கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Read More : பலே பிளான்..!! காதலனுடன் சேர்ந்து கோதுமை மாவில் விஷம் கலந்த காதலி..!! 13 பேரை கொன்ற ஜோடி..!!