fbpx

ஏப்.17 முதலே..!! தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது..!! வெளியான அறிவிப்பு..!!

மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான தேர்தல் இந்தியாவில் தொடங்கியுள்ளது. அந்த வகையில், 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன் தினம் தொடங்கியுள்ளது. மொத்தமாக 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

அரசியல் கட்சிகளும் தொகுதிப்பங்கீட்டை முடித்து விட்டு பிரச்சார களத்தில் இறங்கியுள்ளது. மேலும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரத்தையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல தற்போது மேலும் ஒரு உத்தரவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதே போல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : உஷார்..!! வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள்..!! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

Chella

Next Post

பாமக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறாத அன்புமணி..!! கடலூரில் தங்கர் பச்சான்..!! முழு விவரம் இதோ..!!

Fri Mar 22 , 2024
தமிழ்நாட்டில் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பா.ம.க. வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் விவரம் திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா, மாநிலப் பொருளாளர், பா.ம.க. அரக்கோணம் […]

You May Like