fbpx

1 முதல் 9ஆம் வகுப்பு வரை..!! இறுதித்தேர்வு, விடுமுறை தேதி அறிவிப்பு..!!

தமிநாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வினை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

தமிழ்நாட்டில் 2022-23ஆம் கல்வியாண்டு 1-9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு நடந்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “அனைத்து அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வுகள் தவிர்த்து மற்ற வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு நடத்துவது குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். 4 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்குள் தேர்வை நடத்திட வேண்டும். ஏப்.29ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

பட்டப்பகலில் ஓடும் பேருந்து பெண் வெட்டி படுகொலை......! திண்டுக்கல் அருகே பரபரப்பு.....!

Fri Apr 7 , 2023
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கனவாய்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் கோபி. திண்டுக்கல் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இவருடைய மனைவி தமயந்தி (42) இவர் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 2️ குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், கோபிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் அவருடைய அண்ணன் ராஜாங்கம்(55)என்பவருக்கும் இடையே 2 ஏக்கர் பூர்வீக சொத்தை பாகப்பிரிவினை செய்வது குறித்து […]

You May Like