fbpx

ஆக.2 முதல் ஆக.15 வரை… மக்கள் இதை செய்ய வேண்டும்.. பிரதமர் மோடி வேண்டுகோள்..

‘ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 15 வரை சமூக ஊடகங்களில் ‘இந்திய மூவர்ணக் கொடியை தங்கள் சுயவிவரப் படமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மக்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்..

மான் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் 91-வது பதிப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.. அப்போது “ ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, ‘ஹர் கர் திரங்கா’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி இந்த இயக்கத்தை மேலும் முன்னெடுப்போம்.. தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கிலி வெங்கையாவின் பிறந்தநாள் ஆகஸ்ட் 2 ஆகும். ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 15 வரை சமூக ஊடக கணக்குகளில் தேசிய கொடியை சுயவிவரப் படமாகப் பயன்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்..

எனது அன்பான நாட்டுமக்களே, 75 வருட சுதந்திரம் குறித்த விவாதத்தை இன்று நாடு முழுவதும் ஒரு பயணத்துடன் தொடங்கினோம். அடுத்த முறை நாம் சந்திக்கும் போது, ​​நமது அடுத்த 25 ஆண்டுகளின் பயணம் ஏற்கனவே தொடங்கியிருக்கும். நமது மூவர்ணக் கொடியை நம் வீடுகளிலும், நம் அன்புக்குரியவர்களின் வீடுகளிலும் ஏற்றுவதற்கு நாம் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும்…” என்று குறிப்பிட்டார்

மேலும் இந்நிகழ்ச்சியில் வாஞ்சிநாதன் குறித்து பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.. அப்போது “நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களோடு பேச நேர்ந்தால், நீங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் வாஞ்சி மணியாச்சி ரயில் சந்திப்புப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். தமிழரான, சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் பெயரை இந்த நிலையம் தாங்கி இருக்கிறது. இந்த இடத்தில் தான் 25 வயதே நிரம்பிய இளைஞனான வாஞ்சி, பிரிட்டிஷ் ஆட்சியர் செய்த தவறுக்குத் தண்டனை வழங்கினான்.” என்று தெரிவித்தார்..

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்திற்கான 75 வார கவுண்ட்டவுனைத் தொடங்கும் வகையில், ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் பிரச்சாரம் கடந்த ஆண்டு மார்ச் 12, 2021 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.. இது ஆகஸ்ட் 15, 2023 வரை ஒரு வருடத்திற்கு தொடரும்.

Maha

Next Post

அவன் என்னோட செல்போனை உடைச்சுட்டான் அதனால தான் குத்தினேன்; பழுது பார்க்க பணம் தராததால் நடந்த சோகம்...

Sun Jul 31 , 2022
தலைநகர் டெல்லியின் இந்திரபுரியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞர் இந்திரபுரியை சேர்ந்த நிதிஷ் (22) என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் […]
ஆசிரியையை 101 முறை கத்தியால் குத்திக்கொன்ற முன்னாள் மாணவன்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

You May Like