fbpx

கம்போடியா முதல் தாய்லாந்து வரை!… வெளிநாடுகளிலும் போற்றப்படும் ராமாயணம்!… அங்கு நடக்கும் சுவாரஸ்யங்கள்!

இந்து மதத்தின் முக்கிய இதிகாசமான ராமாயணத்தை மக்கள் மரியாதைக்குரிய ஒன்றாக கருதுகின்றனர். வட இந்தியாவில் இராவண வதம் ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் ராமாயணம் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. அந்த நாடுகள் குறித்து இந்த பதவில் தற்போது பார்க்கலாம்.

அயோத்தியா என்ற வார்த்தையில் பிறந்த தாய்லாந்தின் பழைய தலைநகரான ‘அயுத்தியா’ இன்று சுற்றுலா தலமாக உள்ளது. தாய்லாந்தில் ‘ராமகீன்’ என்ற பெயரில் ராமாயணம் போற்றப்படுகிறது. இங்குள்ள ராஜாக்களை பொதுவாக ‘ராமா’ என அழைக்கிறார்கள். தற்போது ‘கிங் ராமா டென்’ ஆட்சி செய்கிறார்.பேங்காக் அரண்மனை வளாகத்தில் உள்ள எமரால்டு புத்தர் கோயிலில் 2 கி.மீ., அளவு சுவரில் 178 ராமாயண காட்சிகள் மியூரல் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன. இதை காண உலகளவில் பல லட்சம் மக்கள் வருகிறார்கள். இந்த கதை 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.

மியான்மரில் ராமாயணத்தை யம ஜடாவ் அல்லது யமயானம் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இது வெறும் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பாக இல்லாமல், பழம்பெரும் காவியத்தின் தனித்துவமான தழுவலாக உள்ளது. இந்தியாவின் ராம்லீலாவைப் போலவே, யமா ஜடாவும் ஒரு நாடகத் தழுவலாகும். இது பொதுவாக மத விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது. இது நாட்டுப்புறவியல் மற்றும் பௌத்தத்தின் கூறுகளையும் கொண்டுள்ளது. இதன் அசல் இந்திய பதிப்பிலிருந்து வேறுபட்டதாக உள்ளது.

ராமாயணத்தை போல உள்ள கதை கம்போடியாவில் ரீம்கர் என்று அழைக்கப்படுகிறது. இது இந்திய காவியத்தின் மற்றொரு பிராந்திய பதிப்பாகும். இது பௌத்த மதத்தின் சுவாரஸ்யமான பதிப்பாக அமைகிறது. அதே சமயம் இந்திய ராமாயணத்தைப் போலவே இந்தக் கதையும் ராமர், சீதை மற்றும் ராவணனை மையமாகக் கொண்டது. முக்கிய வேறுபாடு என்னவென்றால், கதாபாத்திரங்கள் மனிதர்களாகக் கருதப்படுகின்றன. இந்திய இதிகாசங்களைப் போல கடவுள்களின் அவதாரங்களாகக் குறிப்பிடப்படவில்லை.

இந்தோனேசியாவில் காகவின் ராமாயணம் என்பது இந்திய ராமாயணத்தின் தழுவலாக உள்ளது. இது 8-9 ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவிற்கு வந்ததாக நம்பப்படுகிறது. இது பழைய ஜாவானீஸ் மொழியில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. ராமர், சீதை, லக்ஷ்மணன் மற்றும் அனுமன் ஆகியோரின் முக்கிய கதாபாத்திரங்களைத் தவிர, இந்தோனேசியா பதிப்பில் பல பூர்வீக தெய்வங்களும் உள்ளன. இந்தோனேசியாவின் புகழ்பெற்ற கேகாக் நடனம் ராமாயணத்தின் காட்சிகளையும் உள்ளடக்கியது.

மொரிசீயஸில் ராமாயண் சென்டர் 2001ல் மொரீசியஸில் ராமாயணத்தை போற்றிட ‘ராமாயண் சென்டர்’ சட்டம் இயற்றினர். எந்த ஒரு நாடும் இப்படி ஒரு சட்டம் இயற்றவில்லை. 1984 முதல் இன்று வரை இந்நாடு பல்வேறு நாடுகளில் சர்வதேச ராமாயண கருத்தரங்கு நடத்துகிறது. சீதையை கவர்ந்த ராவணன் இலங்கை நுவரேலியாவில் சிறை வைத்ததால் அதை அசோகவனம் என்கிறார்கள். இங்கு சீதைக்கு கோயில், அருகேயுள்ள குன்றில் ஹனுமன் பாதம் உள்ளது. ஸ்ரீராமரின் மென்மை குணம் வெளிநாட்டினரை வெகுவாக ஈர்த்துள்ளது.

Kokila

Next Post

அதிர்ச்சி..!! வண்டலூர் அருகே மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் பலி..!!விடுமுறையை கொண்டாட வந்தபோது சோகம்..!!

Tue Oct 24 , 2023
இந்தாண்டு ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையில் வந்தது. அதாவது சனி, ஞாயிறு ஏற்கனவே விடுமுறை என்ற நிலையில், திங்கள்கிழமை ஆயுதபூஜையும், செவ்வாய்க்கிழமையான இன்று விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இதனால் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு 4 நாட்களுக்கு தொடர் விடுமுறையாகும். இந்நிலையில், இந்த தொடர் விடுமுறை காரணமாக கர்நாடகாவில் இருந்து 3 சிறுவர்கள் தங்கள் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில், வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் அருகே, ரயில் மோதி […]

You May Like