பிரபல மாடல் அழகி பூஜா சர்க்கார், கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த மூன்று மாதங்களில் மாடல் அழகி ஒருவர் தற்கொலை செய்து கொள்வது இது மூன்றாவது முறையாகும்.
பூஜா சர்க்கார் தெற்கு கொல்கத்தாவின் பான்ஸ்ட்ரோனி பகுதியில் வசித்து வந்தார். இவர் சனிக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பிய பிறகு, அவருக்கு தனது காதலனிடம் இருந்து போன் கால் வந்துள்ளது.. பின்னர் தனது அறைக்குள் ஓடிய பூஜா, உள்ளே இருந்து பூட்டி உள்ளார்.. அவரின் தோழி கதவைத் திறக்கும்படி எவ்வளவோ கூறியும், அவர் கதவை திறக்கவில்லை.. இதையடுத்து அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.. போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பூஜா சர்கார் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இறப்பதற்கு முன் பூஜாவின் காதலனிடம் அவருக்கு அழைப்பு வந்ததாகவும், அதன்பிறகே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும், பூஜாவின்து தோழி கூறியதாக போலீசார் தெரிவித்தனர். பூஜாவின் காதலன் கோபர்தங்காவில் வசித்து வருவதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்..
முன்னதாக மே மாதம், இரண்டு மாடல்கள் தற்கொலை செய்து கொண்டனர். பிதிஷா மே 24 அன்று தனது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார், அதே நேரத்தில் அவரது தோழியும் தொழில்துறையில் சக ஊழியருமான மஞ்சுஷா நியோகியும் மே 27 அன்று தனது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதே போல் தொலைக்காட்சி நடிகை பல்லபி டே தனது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..