fbpx

வீட்டு வரி உயர்வு முதல் மின்கட்டண உயர்வு வரை..! விடியா திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வரி உயர்வு முதல் மின்கட்டண உயர்வு வரை, தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து, வரும் 25ஆம் தேதி காலை 10 மணியளவில் கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

வீட்டு வரி உயர்வு முதல் மின்கட்டண உயர்வு வரை..! விடியா திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

இதுதொடர்பான அறிக்கையில், ”மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி. இந்த விடியா திமுக ஆட்சியில் அப்பாவி மக்கள் நான்கு பக்கமும் இடி வாங்கி நசுங்கி, தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை, வருமான இழப்பு என்று சிக்கி அன்றாட வாழ்வை நடத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் தமிழக மக்கள், தற்போதுதான் மெல்ல மெல்ல தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். மக்களைக் காப்பாற்றுவதற்காகவே அவதாரம் எடுத்த திராவிட மாடல் நாங்கள் தான் என்று தம்பட்டம் அடித்து, வாய்ச் சவடால் வீரர்களாகத் திரியும் விடியா திமுக அரசின் ஆட்சியாளர்கள், மக்களை வஞ்சிக்கும் செயல்களையே தொடர்ந்து செய்து வருகின்றனர்.

வீட்டு வரி உயர்வு முதல் மின்கட்டண உயர்வு வரை..! விடியா திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை விடியா திமுக அரசு தாக்கல் செய்யும்போது வரியில்லா பட்ஜெட் அளித்திருக்கிறோம் என்று மார்தட்டிவிட்டு, துறை தோறும் ஏதாவது ஒரு விதத்தில் வரி உயர்வு, கட்டண உயர்வு என்று அறிவித்து, மக்களை ஏமாற்றி வருகின்றனர். எனவே, வரும் 25ஆம் தேதி பொது நலனை முன்வைத்து கழக அமைப்பு மாவட்டங்களில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டங்களில் அதிமுகவினர், பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

சுரங்க மாபியா கும்பலை பிடிக்க சென்ற காவல்துறை அதிகாரி மீது லாரி ஏற்றி படுகொலை..!

Tue Jul 19 , 2022
அரியானா மாநிலத்தில், மாபியா கும்பல் ஒன்று பட்டப்பகலில், ஒரு மூத்த காவல்துறை அதிகாரி மீது லாரியை ஏற்றி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவில் ஆரவல்லி மலைத்தொடருக்கு அருகில் உள்ள பச்கான் என்னும் இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக, உயர் காவல்துறை அதிகாரி சுரேந்திர சிங் பிஷ்னோய்க்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், இன்று காலை 11 மணியளவில் அவர் காவல்துறையினருடன் குழுவாக சம்பவ இடத்திற்கு […]

You May Like