fbpx

அடுத்த மாதம் முதல்.. இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் செயலி வேலை செய்யாது…

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தியிடல் தளங்களில் வாட்ஸ்அப் ஒன்றாகும், ஆனால் சில ஐபோன் பயனர்கள் அடுத்த மாதத்திலிருந்து வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது. அதன்படி, அக்டோபர் முதல் iOS 10 மற்றும் iOS 11 ஆகிய மாடல்களில் வாட்ஸ் அப் செயலி செயல்படாது.

வாட்ஸ் அப்-ஐ தொடர்ந்து பயன்படுத்த, Apple iPhone 5S, 6 அல்லது 6S பயனர்கள் தங்கள் இயங்கு தளங்களை (operating system) அப்டேட் செய்ய வேண்டும். பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான ஆதரவை நிறுத்தும் முன், வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு நோட்டிபிகேஷன் மூலம் தகவல் தெரிவிக்கிறது. சமீபத்திய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்யவும் பல நினைவூட்டல்களைப் பகிர்ந்து கொள்கிறது, இருப்பினும் வன்பொருள் வரம்புகள் காரணமாக பல சாதனங்களை அப்டேட் செய்ய முடியாததால், வாட்ஸ் அப் வேலை செய்வதை நிறுத்துவிடும்.

வாட்ஸ் அப் நிறுவனம் தொடர்ந்து இயங்குதளங்களை மதிப்பாய்வு செய்து அப்டேட்களை வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே, வாட்ஸ் அப் நிறுவனமும் எந்தெந்த சாதனங்கள் மற்றும் மென்பொருட்கள் மிகவும் பழமையானவை மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பதை கண்காணித்து வருகிறது.. சமீபத்திய பாதுகாப்பு புதுப்பிப்புகள் இல்லாமல் இருந்தாலோ அல்லது வாட்ஸ்அப்பை இயக்க தேவையான செயல்பாடுகள் இல்லாமல் இருந்தாலோ வாட்ஸ் அப் வேலை செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

”தொண்டர்கள் எங்கள் பக்கம்”..! சுப்ரீம் கோர்ட்டில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்..! - புகழேந்தி

Fri Sep 2 , 2022
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை தலை வணங்குகிறோம். ஆனால், தற்போது வழங்கப்பட்டுள்ள 126 பக்கமுள்ள தீர்ப்பில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. முந்தைய தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தது. தற்போது எங்களுக்கு எதிராக […]
”தொண்டர்கள் எங்கள் பக்கம்”..! சுப்ரீம் கோர்ட்டில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்..! - புகழேந்தி

You May Like