கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நள்ளிரவு 1 மணி வரை கிளப்புகள், பார்கள் திறந்திருக்க கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் ஹைடெக் நகரமான பெங்களூருவில் பல மாநில மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக, அங்குள்ள பன்னாட்டு நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.
அதனால் எந்நேரமும் சாலைகளில் மக்கள் மற்றும் வாகனங்களின் இயக்கத்தை பார்க்க முடியும். இந்நிலையில் தான், மாநில அரசின் வருவாயை மேலும் அதிகரிக்க, பெங்களூருவில் உரிமம் பெற்ற பார்கள், கிளப்புகள், உணவகங்கள் உள்ளிட்டவை காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட கர்நாடகா அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான உத்தரவும் அதிகாரப்பூர்வமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பப்கள், ரெஸ்டாரென்ட்களை அதிகாலை 2 மணி வரை திறந்து வைக்க அனுமதி கோரி ஹோட்டல் அசோசியேஷன் நிர்வாகிகள் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. தற்போது, நள்ளிரவு 1 மணி வரை அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read More : ”கட்சியின் பெயரை யாரும் பயன்படுத்தாதீங்க”..!! தவெக நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அதிரடி உத்தரவு..!!