தமிழகம் முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த தமிழ்நாடு மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதனுடன் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே மின்கட்டணம் செலுத்தும் முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று மின்வாரிய அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழ்நாடு மின்வாரியம் நவீனமயமாக்கப்படும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், அடுத்தக்கட்டமாக அனைத்து வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஸ்மார்ட் மின் மீட்டர் மின் நுகர்வோரின் மின் பயன்பாட்டை தானே கணக்கிட்டு அதற்கான கட்டணத்தையும் சம்பந்தபட்டவரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுந்தகவலாக அனுப்பிவிடும்.
அந்த குறுந்தகவலில் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி மூன்று நாட்கள் தொடர்ந்து எச்சரிக்கை தகவல்களும் மின் நுகர்வோருக்கு தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும். அதேபோல், சம்பந்தபட்ட மின் நுகர்வோரின் எல்லைக்கு உட்பட்ட மின் வாரிய அலுவலக மின் வியோக அலுவலகத்திலும் மின் நுகர்வோரின் மின் நுகர்வு பயன்பாட்டு எண்ணுடன் மின் நுகர்வு அளவு, கட்டண விவரங்கள் அனுப்பிவிடும்.
இது தீவிர மின் கட்டணத்தையும் பணமாக செலுத்தாமல் டிஜிட்டல் முறையில் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்தும் நடைமுறையும் கட்டாயமாக்கப்படுகிறது. இவ்வாறு நவீனமாயமாக்கப்பட்ட ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்துவதன் மூலம் மின்வாரிய நடைமுறைகள் எளிதாவதுடன் வேலைப்பளுவும் குறையும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்,