fbpx

அக்.14 – 20 வரை.. ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 1 அக். 14 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகளை (TET) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. மத்திய அரசின் சட்டப்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை intha தேர்வை மாநில அரசுகள் நடத்த வேண்டும். மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற ‘டெட்’ தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும்.

இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி வெளியானது. முதற்கட்ட தேர்வுகள் வருகிற 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கணினி வழியாக நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால் அந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டு தாள்-1க்கான தேர்வு, செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது..

இந்நிலையில் செப்டம்பர் 10-ம் தெதி தொடங்கவிருந்த ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.. நிர்வாக காரணங்களால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாகவும், தேர்வுக்கான மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கமளித்தது..

இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 1 அக். 14 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.. காலை, மாலை என இரு வேளைகளிலும் தேர்வு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. முதல் தாளுக்கு 2,30,878 பேரும், 2-ம் தாளுக்கு 4,01,888 பேரும் என மொத்தம் 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்..

Maha

Next Post

போலீஸ் உடையில் கல்லூரி மாணவன்..! தியேட்டர் நிர்வாகிகளுக்கு மிரட்டல்..! கொத்தாக தூக்கிய நிஜ போலீஸ்..!

Fri Sep 23 , 2022
சினிமா தியேட்டரில் போலீஸ் உடை அணிந்து நிர்வாகிகளை மிரட்டிய கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் அடுத்த மணவாள நகரில் திரையரங்கு ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை 11 மணியளவில் போலீஸ் உடை அணிந்த நபர் ஒருவர் உள்ளே சென்று அங்கிருந்த நிர்வாகிகளிடம் பள்ளி நேரத்தில் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் சினிமா பார்க்க வருவதாக எங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வருவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை […]
மாடல் அழகியை தனது ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கிய தோழி..!! விடிய விடிய சுற்றித்திரிந்த கார்..!! மீண்டும் அதிர்ச்சி

You May Like