யாரும்மா நீ..! 43 சவரன் நகையை குப்பைத் தொட்டியில் வீசிச்சென்ற பெண்..! ஏடிஎம் மையத்தில் பரபரப்பு

குன்றத்தூர் அருகே பெண் ஒருவர் 43 சவரன் நகையை ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கி மற்றும் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காவலாளியாக வேலை செய்துவரும் கோதண்டம் என்பவர் நேற்று காலை ஏடிஎம் மையத்திற்குள் சென்று பார்த்த போது, அங்கிருந்த குப்பை தொட்டியில் கைபை ஒன்று இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது அதில் நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Gold discount in India falls despite prices rising over over 1-month high |  Mint

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நகையை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 35 வயதுடைய பெண் ஒருவர் ஏடிஎம் மையத்திற்குள் சென்று கதவை திறந்து குப்பை தொட்டியில் நகைபையை போட்டு விட்டு செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த பெண் யார் என போலீசார் விசாரித்தபோது, குன்றத்தூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. 35 வயதுடைய தனது மகளை காணவில்லை என்று அவரது பெற்றோர் வாய்மொழியாக போலீசாருக்கு தெரிவித்த நிலையில், பின்னர் அவர் வீட்டிற்கு வந்து விட்டதாக தெரிவித்திருந்தனர்.

Gold prices today fall after hitting 2-week high, silver rates rise | Mint

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை அந்த பெண்ணின் பெற்றோரிடம் காண்பித்த போது அந்த காட்சியில் இருப்பது தனது மகள் என தெரிவித்தனர். அப்போது தான் அவர் 43 பவுன் நகைகளை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றது குறித்து போலீசார் அவரது பெற்றோருக்கு தெரிவித்ததையடுத்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குன்றத்தூர் போலீசார் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் வங்கி ஊழியர்களை அழைத்து நகைகளை அவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பெண் சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், தூக்கத்தில் எழுந்து நடந்து வரும் போது வீட்டில் இருந்த நகையை பையில் போட்டு எடுத்து வந்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. உரிய நேரத்தில் நகை பையை கண்டெடுத்து கொடுத்த வங்கி காவலாளி கோதண்டத்தை போலீசார் வெகுவாக பாராட்டினார்கள்.

Chella

Next Post

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு..? வெளியான பரபரப்பு தகவல்

Tue Jul 5 , 2022
ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் சர்ச்சையில் உள்ள நிலையில், “பொதுச்செயலாளருக்கு அடுத்த நிலையில் உள்ள பொருளாளருக்கு தான் கட்சியை வழி […]
இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு..? வெளியான பரபரப்பு தகவல்

You May Like