2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறி தேர்வு இன்று நடத்தப்படவுள்ளது.
இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறி தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவரகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்த தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு, இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். தேர்வு முடியும் வரை எக்காரணம் கொண்டும் தேர்வர்களைத் தேர்வு மையத்தினை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தங்கள் மையத்திற்கான பெயர்ப்பட்டியல், தேவையான வினாத்தாள் மற்றும் பெயர்ப்பட்டியல், தேவையான வினாத்தாள் மற்றும் OMR விடைத்தாள்கள் பெறப்பட வேண்டும்.