fbpx

Yearender 2025 : ஹேமா கமிட்டி அறிக்கை முதல் அல்லு அர்ஜூன் கைது வரை.. இந்த ஆண்டு சினிமாவை திக்குமுக்காட வைத்த சர்ச்சைகள் ஒரு பார்வை..!!

ஹேமா கமிட்டி அறிக்கை முதல் அல்லு அர்ஜூன் கைது வரை திரையுலகில் பல சர்ச்சைகளை இந்த வருடம் சந்தித்தது, அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

ஹேமா கமிட்டி அறிக்கை : ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிரான திட்டமிட்ட துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றை வெளிப்படுத்தியது. தங்களுக்கு ஒத்துழைக்கும் நடிகைகளுக்கு போதிய வசதிகள், தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அளித்து வருவதும், ஒத்துழைப்பு கொடுக்காத நடிகைகளை சூட்டிங் ஸ்பாட்டில் அவமானப்படுத்துவது, கழிவறை கூட ஒதுக்காமல் இருப்பது உட்பட பல அவமரியாதைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அந்த கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை வெளியான நாள் முதல் மலையாள திரையுலகம் பரபரப்பாகி போனது. மோகன்லால் உட்பட அனைத்து அம்மா கட்சி உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர்.

அல்லு அர்ஜூன் கைது : அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்ற நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் உள்ளார். இந்த சோகம் இருந்தபோதிலும், புஷ்பா 2 அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படம்.

பூனம் பாண்டே இறந்த செய்தி : பூனம் பாண்டே தனது மரணச் செய்தியைப் பரப்பி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஸ்டண்ட் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்த நடவடிக்கைக்கு ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

‘ஐசி 814: காந்தஹார் ஹைஜாக்’ சர்ச்சை : 1999ஆம் ஆண்டு நேபாளம் தலைநகர் காத்மண்டூவில் இந்திய விமானம் ஒன்று கடத்தப்பட்ட உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட IC-814: காந்தஹார் கடத்தல் (IC 814: The Kandahar Hijack) என்ற வெப்-சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த ஆக.29ஆம் தேதி வெளியானது. இந்த வெப் சீரிஸ்தான் பாஜகவினர் மத்தியிலும், வலதுசாரிகள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்புக்குள்ளாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

நயன்தாரா-தனுஷ் சர்ச்சை : நடிகை நயன்தாராவும் தனுஷும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஆனால், இருவரும் தற்போது எதிரிகளை விட மாேசமாக சண்டை போட்டனர். நானும் ரெளடிதான் படத்தின் காட்சிகளை நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தக்கூடாது என தனுஷ் நோட்டீஸ் அனுப்பி, அதற்கு நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாயையும் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை மீறி, நயன்தாரா அந்த காட்சிகளை தனது படத்தில உபயோகித்ததால் அவர் மீது தனுஷ் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதனால், இவர்களுக்குள் நீதிப்போர் நிலவி வருகிறது. நண்பர்களாக இருந்த இருவரும், சண்டையிட்ட பிறகு ஒரே திருமணத்தில் கலந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. அப்போது இருவருமே ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்காமல் திரும்பி விட்டனர். இதுதான் இந்த ஆண்டிலும், இவர்களின் சர்ச்சையிலும் ஹைலைட்டாக பார்க்கப்பட்டது. 

தர்ஷன், ரேணுகாசாமி கொலை வழக்கு : கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். தர்ஷன், பவித்ரா கவுடா ஆகிய 7 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

கபில் சர்மாவின் இனவெறி கருத்து : இயக்குனர் அட்லியின் தோல் நிறம் குறித்து இனவெறி கருத்துக்களை தெரிவித்ததற்காக கபில் சர்மா விமர்சனங்களை எதிர்கொண்டார். பின்னர் மன்னிப்பு கேட்டார்.

லாபட்டா லேடீஸ் : ஆஸ்கர் விருதுக்கான போட்டியிலிருந்து இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்த லாபட்டா லேடிஸ் திரைப்படம் வெளியேறி உள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதுக்காக பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான திரைப்படங்கள் பரிந்துரைக்கப் பட்டிருந்தன. இந்தியா சார்பில் பெண் இயக்குனர் கிரண் ராவ் கைவண்ணத்தில் உருவான லாபட்டா லேடிஸ் திரைப்படத்தை ஒன்றிய அரசு பரிந்துரை செய்திருந்தது.  இளம்பெண்கள் இருவர் தங்கள் கணவர்களிடம் இருந்து பிரிந்ததற்கான காரணங்கள் பற்றிய கதை கருவை மையமாக வைத்து இந்த படத்தை அமிர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கி இருந்தார்.

Read more ; Happy New Year 2025 : கிரிபாட்டி தீவுகளில் பிறந்தது புத்தாண்டு.. மக்கள் உற்சாக கொண்டாட்டம்..!!

English Summary

From the Hema Committee report to Allu Arjun’s arrest.. a look at the controversies that rocked cinema this year..

Next Post

இரண்டாவதாக நியூசிலாந்து நாட்டில் பிறந்தது புத்தாண்டு.. வான வேடிக்கைகளுடன் புதிய வருடத்தை வரவேற்ற மக்கள்..!!

Tue Dec 31 , 2024
Second New Year was born in New Zealand.. People welcomed the new year with celestial fun.

You May Like