fbpx

மக்களே…! இன்று முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை… வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு…!

இன்று முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை, வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை, வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி மறு சீரமைப்பு, உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 29-ம் தேதி வெளியிடப்பட்டு அன்றிலிருந்து நவம்பர் 28-ம் தேதிவரை பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.

விண்ணப்பங்கள் வரும் டிசம்பர் 24-ம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, 2025-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். எனவே, அக்டோபர் 29 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் , திருத்தங்கள், இடமாற்றம் செய்யவோ அல்லது ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர், தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றைப் பூர்த்தி செய்து வழங்கலாம்.

வயதுக்கான சான்றாக, பிறப்பு சான்றிதழ், ஆதார், பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், பிறந்த தேதியுடன் கூடிய 10-ம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு சான்றிதழ்கள், கடவுச்சீட்டு ஆகியவற்றை அளிக்கலாம். 25- வயதுக்கு கீழ் உள்ள விண்ணப்பதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம். மேலும், https://voters.eci.gov.in/, ஆகிய இணையதள முகவரி மற்றும் “வாக்காளர் உதவி” கைபேசி செயலி (VOTER HELPLINE Mobile App) ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

From today till 18th October… Door to door verification of voter list

Vignesh

Next Post

குரூப் பி எழுத்து தேர்வு முடிவுகளை வெளியிட்ட யுபிஎஸ்சி...!

Tue Aug 20 , 2024
UPSC has released Group B written exam results.

You May Like