fbpx

இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை… தற்காலிக ஆசிரியர் பணி குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு…

தற்காலிக ஆசிரியர் பணிக்கு இன்று முதல் 6ம் தேதி வரை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது..

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில் அந்த பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என்று  அரசு அறிவித்தது. ஆனால் முறையான வழிகாட்டுதல் இன்றி வெளியான அறிவிப்பு காரணமாக தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்தது.. இதையடுத்து தற்காலி ஆசிரியர் நியமனத்திற்க்கான திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை கடந்த 2ம் தேதி வெளியிட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், இல்லம் தேடிக் கல்வியில் உள்ள தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், காலிப் பணியிடங்கள் உள்ள பள்ளிகளின் விவரங்கள் தகவல் பலகையில் வெளியிட வேண்டும், 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் விதிகள் மற்றும் வழிகாட்டுதல் தெரிவிக்கப்பட்டன.

இதையடுத்து, விண்ணப்பிக்கும் நபர்களுக்கான மாதிரி விண்ணப்ப படிவங்கள், அடங்கிய விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தகுதியுள்ள நபர்கள் இன்று முதல் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது..

Maha

Next Post

மிஸ் இந்தியா 2022.. கர்நாடகாவின் சினி ஷெட்டி பட்டம் வென்றார்..

Mon Jul 4 , 2022
கர்நாடகாவைச் சேர்ந்த 21 வயதான சினி ஷெட்டி, மிஸ் இந்தியா 2022 பட்டத்தை வென்றார். மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் ஞாயிற்றுக்கிழமை மாலை மிஸ் இந்தியா அழகி போட்டி நடைபெற்றது.. கர்நாடகாவைச் சேர்ந்த சினி ஷெட்டி மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்.. அவர் தற்போது பட்டய நிதி ஆய்வாளர் (சிஎஃப்ஏ) படித்து வருகிறார். மிஸ் இந்தியா பட்டத்தை வென்றதன் மூலம் சினி ஷெட்டி 71வது உலக அழகி போட்டியில் […]

You May Like