ஒருவர் வெளிநாடு செல்வதற்கும் அங்கு தங்குவதற்கும், அந்த நாட்டின் குடியுரிமை அதிகாரிகளால் கொடுக்கப்படும் அனுமதி தான் விசா. சில நாடுகள் விசா இல்லாமலும் பயணிகளை தங்கள் நாடுகளுக்குள் அனுமதிக்கின்றன. இந்தியாவை பொறுத்தமட்டில், இலங்கை மற்றும் தாய்லாந்து விசா இல்லாமல் பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் இந்தியர்கள் விசா இல்லாமலேயே மலேசியாவுக்குச் செல்லலாம். அங்கு 30 நாட்கள் வரை தங்கலாம் என மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். அதே போல் தாய்லாந்து நவம்பர் 10ஆம் தேதி முதல் இந்திய பயணிகளுக்கான விசா தேவையை ரத்து செய்தது. இதன்மூலம் இந்தியாவில் இருந்து தாய்லாந்து செல்பவர்கள் 30 நாட்கள் வரை அங்கு தங்கலாம்.
அடுத்த ஆண்டு மே 10ஆம் தேதி வரை விசா இல்லா சேவை நடைமுறையில் இருக்கும். தேவை அதிகரிக்கும்பட்சத்தில் இந்தத் திட்டம் நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்று தாய்லாந்து அரசு தெரிவித்திருக்கிறது. மேலும் விசா இல்லாமல் இந்திய குடிமக்கள் கீழ்க்கண்ட நாடுகளுக்குச் செல்ல முடியும்.
பார்படோஸ்
நுயே தீவு
நேபாளம்
பூடான்
டொமினிகா
க்ரெனடா
ஹைதி
மொரீஷியஸ்
செனகல்
செயின்ட் வின்சென்ட் மற்றும் தி க்ரெனாடின்ஸ்
சமோவா
மான்ட்செராட்
செர்பியா
ட்ரினிடாட் மற்றும் டொபாகோ
ஹாங்காங்