fbpx

மகிழ்ச்சி செய்தி…! முழுநேர Ph.D மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்…! தமிழக அரசு அறிவிப்பு…!

முழுநேர முனைவர் பட்டப்படிப்பை படிக்கும் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயற்படுத்தப்படும் முழுநேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2023-2024-ஆம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

திட்ட விண்ணப்பங்கள் விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்படிவம் www.tn.gov.in/forms/deptname/1 என்ற இணைய முகவரியில் பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்துப் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.12.2023 நாளன்று மாலை 5.45 மணிக்குள்,”இயக்குநர், ஆதிதிராவிடர் நல இயக்குநரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை-600 005″ என்ற முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முந்தைய கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது.

Vignesh

Next Post

நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை நிறுவனங்கள் ஆதரிப்பதில்லை!… ஆய்வில் தகவல்!

Wed Nov 22 , 2023
நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட ஊழியர்களில் 85% பேர், தங்கள் நிறுவனங்களால் ஆதரிக்கப்படுவதில்லை என்று காப்பீட்டுத் தொழில்நுட்ப நிறுவனமான ப்ளமின் ‘ஹெல்த் ரிப்போர்ட் ஆஃப் கார்ப்பரேட் இந்தியா ஆய்வில் தெரிவித்துள்ளது. இதுதவிர, ஐந்து சதவீதத்திற்கும் குறைவான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட விரிவான சுகாதார உதவிகளை வழங்குகின்றன. 51 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களில் 50 சதவீதம் பேர் முதலாளிகளால் வழங்கப்படும் சுகாதாரத் திட்டங்களை ஏற்றுக்கொண்டாலும், 20-30 வயதுக்குட்பட்ட 25 சதவீத […]

You May Like