fbpx

தாயுடன் உல்லாசம்..!! எவ்வளவு சொல்லியும் கேட்காததால் விவசாயியை வெட்டி சாய்ந்த சிறுவன்..!!

தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியை அடுத்த பெரியானுர்செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நாகராஜன் (50). இவரது மனைவி வசந்தா (40). இவர்களுக்கு வினோத்குமார் (25), வினோதினி (23) ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நாகராஜன் நேற்று முன்தினம் காலை தனது விவசாய தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி தனது பைக்கில் சென்றிருக்கிறார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை தேடி தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு செல்லும் வழியில் நாகராஜன் தலை, கழுத்து பகுதியில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலைக்கு வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், புதுப்பேட்டையை சேர்ந்த தேவராஜ் மகன் சதீஷ் (19) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக அந்த இளைஞர் அளித்த வாக்குமூலத்தில், தன்னுடைய தாய் ரத்னா (45) உடன் நாகராஜன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இதனை அறிந்த ரத்னாவின் மகன் கண்டித்துள்ளார். அப்படி இருந்த போதிலும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்து நாகராஜனை கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி, நாகராஜ் தோட்டத்திக்கு வருவதை உறுதி செய்த பின் சம்பவத்தன்று பட்டா கத்தியுடன் காத்திருந்ததாகவும், எதிர்பார்த்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த நாகராஜனை வெட்ட முயன்ற போது சுதாரித்து கொண்டு தப்பி ஓட முயன்ற போது துரத்தி சென்று தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டிக் கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

சென்னையில் வெள்ள பாதிப்பு...! சுமார் 15,000 பேர் பாதுகாப்பான வகையில் மீட்பு...!

Tue Dec 5 , 2023
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 15,000 பேர் பாதுகாப்பான வகையில் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்!அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவைகளை அரசு கொடுத்து வருகிறது, இதுவரை 4 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது என தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார். மிக்ஜம்’ புயல்’ வடமேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் […]

You May Like