fbpx

நூல் விலை மேலும் குறைப்பு.. மகிழ்ச்சியில் பின்னலாடை உற்பத்தியாளர்கள்…

திருப்பூரில் ஒரு கிலோ நூல் விலை ரூ.30 குறைந்துள்ளது..

கோவை, திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருப்பது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து கொள்வார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஜவுளி உற்பத்தியாளர்கள் 15 நாள் வேலை நிறுத்தம்!!

இதனிடையே கடந்த சில மாதங்களாகவே பருத்தி மற்றும் நூல் விலை கடுமையாக உயர்ந்ததால், பின்னலாடை மற்றும் அது சார்ந்து இயங்கும் ஜாப் ஒர்க் உட்பட பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்..

இதையடுத்து மத்திய அரசு இறக்குமதி வரியை தளர்த்தியதால் திருப்பூரில் கடந்த மாதம் ஒரு கிலோ நூல் விலை ரூ.40 குறைக்கப்பட்டது.. இந்த சூழலில் நூல் விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.. திருப்பூரில் ஆகஸ்ட் மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. ஒரு கிலோ நூலின் விலை ஜூலை மாதத்தில் ரூ.40 குறைக்கப்பட்ட நிலையில், மேலும் 30 குறைக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் நூல் விலை ரகத்திற்கு ஏற்றப்படி ரூ.320 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது..

Maha

Next Post

’தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே இருப்பதால் 27 உயிர்கள் பறிபோயிருக்கின்றன’..! அன்புமணி ராமதாஸ்

Mon Aug 1 , 2022
ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்தை பிரகடனம் செய்வதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு 27 உயிர்கள் பலியான பிறகும் அதை தடை செய்யும் விஷயத்தில் தமிழக அரசு […]
’தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே இருப்பதால் 27 உயிர்கள் பறிபோயிருக்கின்றன’..! அன்புமணி ராமதாஸ்

You May Like