fbpx

அரசியலில் குதித்த ஜி.பி.முத்து ! பரபரப்பு தகவல்…

ஜி.பி.முத்து அரசியலில் குதித்துள்ளார் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகிய ஜ.பி.முத்து தனது குடும்பமே அதிமுக-வுக்கு ஆதரவு எனவும் ஜெ.தான் எனக்கு மிகவும் பிடித்த  தலைவர் எனவும் வீடியோ வெளியுள்ளார். இந்த வீடியோவை அதிமுக ஐ.டி.விங் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு ஜி.பி. முத்துவை ஈடுபடுத்தலாம் என அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

டிக்.டாக்  மூலம் புகழ்பெற்று தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி உள்ளார் ஜி.பி. முத்து . உடன்குடியில் மரப்பொருள் விற்பனை செய்து வந்த அவர் யூடியூபில் தனது வீடியோக்களை பதிவிட்டார். பின்னர் படிப்படியாக அவர் மக்களை வெகுவாக கவர்ந்து யூடியூபில் சம்பாதிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்.

பின்னர் பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்து அவர் உள்ளே சென்றார். 2 வாரங்கள் மட்டும் உள்ளே இருந்த நிலையில் அவர் வெளியே வந்ததும் அவருக்கு இன்னும் ரசிகர்கள் அதிகமானார்கள். இதையடுத்து அவர் கடைத்திறப்பு விழா போன்ற சிறு சிறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அரசியலில் பிராசரத்திற்கும் வாய்ப்பு காத்துள்ளது.

Next Post

தேர்வு நுழைவுச்சீட்டில் சன்னி லியோன் படம் வந்ததால் சர்ச்சை!!

Wed Nov 9 , 2022
ஆசரியர் தேர்வில் தேர்வாளர் நுழைவு சீட்டில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக சன்னி லியோன் படம் வந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. கர்நாடகாவில் நடந்த ஆசிரியர் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தேர்வர் ஒருவர் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய பதிவெண்ணை செலுத்தினார்.நுழைவு சீட்டும் வந்தது. ஆனால், அதில் இருந்த படத்தில் இருந்த நபர் சன்னிலியோன். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் குழப்பமானார். இந்த அனுமதிச்சீட்டை […]

You May Like