விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தான் கேப்ரில்லா. இவர் கடந்த 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘3’ படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார். இப்படத்திற்கு பின் சமுத்திரக்கனியின் அப்பா படத்தில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய கேப்ரில்லா அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைக்கக்கூடிய வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கேப்ரில்லா, தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை குறித்து பேசியுள்ளார்.
அதில், “நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது அந்த சமயத்தில் என்னிடம் மொபைல் இல்லை, அதிகம் படிப்பில் கவனம் செலுத்தியிருந்தேன். அப்போது, என்னுடைய புகைப்படத்தை மார்பிங் செய்து விட்டனர். அந்த புகைப்படத்தில் இருந்தது நான் இல்லை. ஒருவேளை நானா இருக்குமோ என்று தோன்றும் அளவிற்கு அந்த புகைப்படம் என்னை போல் இருந்தது. இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. மூன்று நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை. பள்ளியில் என்னை அப்படி பார்த்தார்கள். அந்த சமயங்களில், மிகவும் கஷ்டப்பட்டேன் என்று கேபிரில்லா தெரிவித்துள்ளார். கேப்ரில்லா சொன்ன விஷயம் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
“தாய்ப்பால் விற்பனை செய்ய அனுமதி கிடையாது” – FSSAI எச்சரிக்கை..!