மத்திய அரசின் கெயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பம் தொடங்கியுள்ளது. மொத்தம் 73 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கேட் 2025 தேர்வை எழுதியவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிடம் : இதில் பொது பிரிவில் – 32, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் – 5, ஒபிசி பிரிவினர் – 20, எஸ்சி பிரிவினர் – 10, எஸ்டி பிரிவினர் – 6 என மொத்தம் 73 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு : இப்பணியிடங்களுக்கு 18.03.2025 தேதியின்படி, அதிகபடியாக 26 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 10 முதல் 15 வயது வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.
கல்வித் தகுதி : கெயில் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு துறை சார்ந்த பாடப்பிரிவுகளில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கேட் 2025 (GATE‐2025) தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வை எழுதி இருக்க வேண்டும்.
சம்பள விவரம் : கெயில் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நிர்வாக டிரைய்னி பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் கேட் 2025 தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் அடுத்தக்கட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://gailonline.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் தனியாக செலுத்த வேண்டிய அவசியமில்லை. கேட் 2025 விண்ணப்பப் பதிவு எண் மற்றும் அட்மிட் கார்டு எண் ஆகிய விவரங்களை விண்ணப்பத்தில் அளிக்க வேண்டும்.
Read more : விபரீதத்தில் முடிந்த இன்ஸ்டா நட்பு.. 13 வயது சிறுமி கர்ப்பம்.. ஆசை வார்த்தை கூறி இளைஞன் அத்துமீறல்..!!