fbpx

கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகள்/எம்.பி.ஏ மற்றும் சி.ஏ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு!

கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் ஜூனியர் அசோசியேட் மற்றும் சீனியர் அசோசியேட் பதவிகளுக்கு 120 காலியிடங்கள் உள்ளன. அந்த இடங்களை நிரப்புவதற்காக தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பேச்சிலர் ஆஃப் இன்ஜினியரிங் படிப்பில் எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்/ மெக்கானிக்கல் /புரொடக்சன் & இண்டஸ்ட்ரியல் மேனுஃபாக்ச்சரிங்/ ஆட்டோ மொபைல் / இன்ஸ்ட்ருமென்ட்டேஷன் / சிவில் ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . மேலும் சி.ஏ/ ஐ.சி.டபிள்யூ.ஏ/ எம்.பி.ஏ/ எம்.எஸ்.டபுள்யு/ பி.ஜி டிப்ளமோ மற்றும் டிப்ளமோ இன்ஜினியரிங் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது வரம்பு 32 ஆகும். இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ஊதியமாக மாதம் ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 10.04.2023 ஆகும். தகுதியும் திறமையும் ஆர்வமும் இருக்கும் நபர்கள் கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்குமாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு பொது பிரிவினருக்கு கட்டணமாக 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் ஏதும் இல்லை . இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற விபரங்களை தெரிந்து கொள்ள gailonline.com என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம் .

Baskar

Next Post

இந்தியாவில் 6ஜி சேவை எப்போது?... புதிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி!... முழுவிவரம் உள்ளே!

Sat Mar 25 , 2023
இந்தியாவில் 6ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான சோதனை தொடங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் 6ஜி சேவை தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்குவதற்கு, கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில், பல துறை அமைச்சகங்கள், துறைகள், தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர்கள், ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனங்கள், கல்வி சார்ந்த குழுக்கள், தரநிர்ணய அமைப்புகள் மற்றும் தொழில் துறையினர் ஆகியோர் இணைந்து 6ஜி தொழில்நுட்ப புத்தாக்க குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு […]

You May Like