fbpx

திருச்செந்தூரில் தொடங்கியது கந்தசஷ்டி விழா..!! நவ.7, 8ஆம் தேதிகளில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்..!!

திருச்செந்தூரில் இன்று அதிகாலை கந்தசஷ்டி விழா தொடங்கியது. பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் விடிய விடிய பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். இந்தாண்டு கந்தசஷ்டி விழா நவம்பர் 2ஆம் தேதியான இன்று அதிகாலை துவங்கியது. இதையடுத்து, நவம்பர் 7ஆம் தேதி சூரசம்ஹாரமும், நவம்பர் 8ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது.

கந்தசஷ்டி விரதத்தின் முதல் 5 நாட்களுக்கு தினமும் ஒரு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 7ஆம் தேதி ஆறு லட்சம் பேரும், திருக்கல்யாணத்திற்கு இரண்டு லட்சம் பேரும் வருவார்கள் என்று கூறப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி 181 இடங்களில் சிசிடிவி கேமராக்களும், கோபுரங்களும் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

விழா நாட்களில் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவசர சிகிச்சை, மருத்துவ உதவிக்கு முக்கிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன. சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு 18 இடங்களில் 1.30 லட்சம் சதுரடியில் நிழல் கொட்டகைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் விரைவாக தரிசனம் செய்ய சிறப்பு வழிகளும், கந்தசஷ்டி திருவிழாவின் போது நாள் முழுவதும் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்புக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கந்தசஷ்டி நிகழ்வுகளை பக்தர்கள் பார்க்க எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. விழா நாட்களில் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை பராமரிக்க 400 தூய்மை பணியாளர்கள் உள்ளனர். திருச்செந்துாருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : சுளுக்கால் உண்டான வீக்கத்தை உடனே சரிசெய்யும் இயற்கை வைத்தியம்..!! டிரை பண்ணி பாருங்க..!!

English Summary

Surasamharam will be held on November 7 and Thirukalyanam on November 8.

Chella

Next Post

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை..!! மாதம் ரூ.35,000 சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Sat Nov 2 , 2024
The Indian Agricultural Research Institute has published an employment notification to fill the vacant posts.

You May Like