fbpx

காங்கிரஸின் காந்தி குடும்பம் ஒரு “கோழை”..! இந்தியா கூட்டணி புறக்கணிக்காத ஊடங்களுக்கு எச்சரிக்கை – ஸ்மிருதி இரானி…

14 செய்தி தொகுப்பாளர்களை புறக்கணித்த எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணியை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார். மேலும் அவர் காங்கிரஸின் காந்தி குடும்பத்தை “கோழை” என்றும் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்துடன் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியின் ஆலோசனை கூட்டங்கள், பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் நடந்துள்ளன. அதன் தொடர்ச்சசியாக் 14 உறுப்பினர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவின் முதலாவது கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி டெல்லியில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் நடந்தது. இந்த கூட்டத்த்தில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்துள்ளனர். இந்தியா கூட்டணி சார்ந்த கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் பல்வேறு ஊடக நிறுவனங்களில் பணியாற்றி வரும் 14 செய்தியாளர்களின் நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.

அவர்கள் எதிர்ப்பையும் வெறுப்பூட்டும் பேச்சுகளை வெளுப்படுத்துவதாக அவர்கள் புறக்கணிக்கப்படுவதாக அறிவித்தனர். அதில் ரிபப்ளிக் நெட்வொர்க்கின் “அர்னாப் கோஸ்வாமி”, ஆஜ் தக்கின் “சுதிர் சௌத்ரி”, நியூஸ்18 ஹிந்தியின் “அமிஷ் தேவ்கன்”, டைம்ஸ்நவ்வின் “நவிகா குமார்”, இந்தியாடுடே குழுமத்தின் “கௌரவ் சாவந்த்” உள்ளிட்டோரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் ‘ஜன் ஆஷிர்வாத் யாத்ரா’வின் ஒரு பகுதியாக மத்தியப் பிரதேசத்தின் செஹூரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சகர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களிடம் பேசியதாவது, “பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன” என்று குற்றம் சாட்டினார். “இன்னும் இங்கேயே இருந்துகொண்டு, பதிவு செய்துகொண்டிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு எனது நன்றிகள் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் ’14 பத்திரிகையாளர்களைப் புறக்கணித்து காங்கிரஸ் பட்டியலை வெளியிட்டது. உங்கள் பெயர்களையும் அவர்கள் பட்டியலில் சேர்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். காந்தி குடும்பம் இப்படி கோழைத்தனமானது என்று எங்களுக்குத் தெரியாது, அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பயப்படுகிறார்கள்” என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.

Kathir

Next Post

குட் நியூஸ்..!! அதிரடியாக குறைகிறது மின் கட்டணம்..? தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்த முக்கிய முடிவு..!!

Sun Sep 17 , 2023
தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது சேவை மின் இணைப்பு இருந்து வருகிறது. இதற்கு வீட்டுப் பிரிவுக்கான மின் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 2022இல் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில், முதல்முறையாக அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது சேவை பிரிவுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.8-ஆகவும், மாதம் நிரந்தர கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.100 எனவும் தனி மின்கட்டணத்தை […]

You May Like