fbpx

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் எம்பிபிஎஸ் மற்றும் நர்சிங் படித்தவர்களுக்கு ₹45000/- சம்பளம் வரையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் இரண்டு காலிப்பணியிடங்கள் இருக்கின்றன அவற்றினை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. மருத்துவ அலுவலர் பணியில் ஒரு காலியிடமும் செவிலியர் பணியில் ஒரு காலியிடமும் உள்ளது. அவற்றை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அன்னூர்ணம் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி மருத்துவ அலுவலர் பணிக்கு எம்.பி.பி.எஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செவிலியர் பணிக்கு கல்வித் தகுதியாக பி.எஸ்.சி/எம்.எஸ்.சி/ டிப்ளமோ ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பில் செவிலியர் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பிற்கான வயது வரம்பு பற்றி குறிப்பிடப்படவில்லை. இந்த வேலைவாய்ப்பில் மருத்துவ அலுவலர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக ரூ.45000/- சம்பளமாக வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவிலியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக மாதம் மாதம் ரூ.16500 வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் மற்றும் தகுதி உடையவர்கள் தங்களது விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ்களுடன் 10,04,2023 தேதிக்குள் போர்ட் ரூம்
ஜி.ஆர்.ஐ இன் நிர்வாகத் தொகுதி, காந்திகிராம் ரூரல் நிறுவனம், திண்டுக்கல் – 624302. என்ற முகவரிக்கு சென்று நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுவோர் திண்டுக்கல்லில் பணியமர்த்தப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய ruraluniv.ac.in என்ற முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Rupa

Next Post

தாய்மொழியே சிறந்தது!... ஆங்கில மொழியை பயன்படுத்தினால் அபராதம்!... இத்தாலியில் புதிய சட்டம் அமல்!

Thu Apr 6 , 2023
நாட்டின் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் எந்தவொரு வெளிநாட்டு மொழி, குறிப்பாக ஆங்கிலத்தை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் இத்தாலி அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவில் அசாத்திய ஆற்றல் கொண்ட சாட் ஜிபிடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் இத்தாலியில் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முறையான தொடர்புக்கு ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய இத்தாலி முயல்வதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில், இத்தாலியில் உள்ள குடிமக்கள் முறையான தகவல்தொடர்புக்காக ஆங்கிலம் அல்லது வேறு […]

You May Like