தெலுங்கானா மாநில பகுதியில் உள்ள திருமலாகிரி கிராமத்தில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி தினமும் அந்த பகுதியில் இருக்கும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி சென்ற வெள்ளிக்கிழமை அன்று இரவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமியின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், சிறுமியை 3 பேர் கொண்ட இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பிறகு தற்கொலை செய்ததை போல் சடலத்தை வீட்டிலேயே கட்டி தொங்கவிட்டுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட 3 இளைஞர்கள் குழுவில் ஏற்கனவே ஒருவன் மீது பாலியல் தொல்லை தொடர்பான புகார் ஏற்கனவே காவல் நிலையத்தில் இருந்துள்ளது. இதனால், அவர்கள் கூட்டாக சேர்ந்து சிறுமியிடம் அத்துமீறிய நிலையில் கொலை செய்திருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.