fbpx

இந்து முன்னணி நிர்வாகி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…! போலீசார் அதிரடி நடவடிக்கை…!

ஊருக்குள் பிரபலமாக தனது வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசி, போலீசில் சிக்கிய இந்து முன்னணி இயக்க நிர்வாகி சக்கரபாணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது‌.

கும்பகோணம், மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி. இவருக்கு மாலதி என்ற மனைவியும், இனியன் என்ற மகன் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு முதல் சக்கரபாணி, இந்து முன்னணியில் கும்பகோணம் மாநகரச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், சக்கரபாணி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது தனது வீட்டின் முன்பாக மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசியதாக கடந்த மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை ஏற்று உடனடியாக விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் விசாரிக்க தொடங்கினர். போலீசார்ம் சந்தேகத்தின் பெயரில் சக்கரபாணியிடம் விசாரணை மேற்கொண்டனர். இரண்டு மணி நேரம் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. கும்பகோணம் பகுதியில் தன்னுடைய பெயர் பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக தானே இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக ஒப்புக்கொண்டார். இதை அடுத்து போலீசார் அவரை கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Vignesh

Next Post

"மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு" அமைச்சர் சொன்ன குட் நியூஸ்...

Fri Dec 2 , 2022
ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று […]
மின் கட்டண முறையில் அதிரடி மாற்றம்..!! அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு..!!

You May Like