சமையல் அறையில் இருக்கும் ஒரு அற்புதமான மருந்து என்றால் அது பூண்டு தான். பூண்டை நமது முன்னோர் பல நோய்களை குனபடுத்த பயன்படுத்தினர். ஆனால் நமக்கு பூண்டின் மருத்துவ குணங்கள் பற்றி சரியாக தெரிவது இல்லை. இதனால் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் நாம் மாத்திரைகளையே நம்புகிறோம். அந்த வகையில், பூண்டுகளை நாம் அன்றாட உணவில் சேர்ப்பதால் என்ன நடக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.
பொதுவாக,பூண்டை நாம் பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு போன்ற பல பிரச்சனைகளை வராமல் தடுக்கலாம். பூண்டு சாப்பிடுவதால், ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுக்க முடியும். அதே சமயம், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க பூண்டு பெரிதும் உதவும்.
நாம் பூண்டு சாப்பிட்ட 2-4 மணிநேரத்தில், புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும். ஆம், இது கேட்பதற்கு ஆச்சர்யமாக இருக்கலாம், ஆனால் இது உண்மை. ஆனால் அனைத்து செல்களும் ஒரே நாளில் அழிந்து விடாது. பூண்டு சாப்பிட்ட 4-6 மணிநேரத்தில் உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும். பூண்டு சாப்பிட்ட 6-7 மணிநேரத்தில், நமது இரத்தத்தில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழியும்.
நாம் தொடர்ந்து பூண்டு சாப்பிடுவதால், இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும், இரத்த அழுத்தத்தை சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், கட்டாயம் பூண்டு சாப்பிட வேண்டும். இதனால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலப்படும். மேலும், பூண்டு சாப்பிடும் போது, எலும்புகளின் வலிமை அதிகரிக்கும். அது மட்டும் இல்லாமல், அதிகப்படியான சோர்வை குறைக்க பூண்டு உதவும்.