fbpx

Gas சிலிண்டர் விலை உயர்ந்தது!… எவ்வளவு தெரியுமா!

Gas: வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.23.50 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சமையல் கேஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. வர்த்தக கேஸ் சிலிண்டரை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்படும்.

அந்தவகையில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்து ரூ.1,960க்கு விற்பனையாகவுள்ளது. சென்னையில் நேற்றுவரை ரூ.1937 என்று விற்பனை செய்யப்பட்டு வந்த வர்த்தக சிலிண்டர்கள் இன்றுமுதல் ரூ.1,960க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அதேவேளை வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலையில் எந்தவிதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதாவது வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி ரூ.918.50க்கு விற்பனை ஆகிறது.

Readmore:  விவசாயிகளுக்கு குட்நியூஸ்!… ரூ.24,420 கோடி உர மானியமாக வழங்க மத்திய அரசு ஒப்புதல்!

Kokila

Next Post

புற்றுநோயை தடுக்கும் கொடுக்காப்புளி.! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா.!?

Fri Mar 1 , 2024
90ஸ் கிட்ஸிற்கு மிகவும் பிடித்தது இந்த கொடுக்காப்புளி. 90ஸ் கிட்ஸ் அனைவரும் சிறுவயதில் வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் கொடுக்காப்புளி பறித்து சாப்பிட்டு இருப்போம். இதன் சுவை தற்போதுள்ள குழந்தைகளுக்கு தெரிவதில்லை. தற்போது கடைகளில் கூட கொடுக்காப்புளியை அதிகம் காண முடிவதில்லை. குறிப்பாக இதன் சுவையை விட இதில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது என்பதால் ஏழைகளின் ஆப்பிள் என்று இதை வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இதில் என்னென்ன நோய்களை […]

You May Like