கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுப்புகளில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கிட்டதட்ட 468 மீட்டர், (1535 அடி) உயரத்தில் உள்ளது. மூலவர் ஐயப்ப சுவாமியின் சிலை புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷானங்களை கொண்டு உருவாக்கப்பட்ட நவ பாஷான சிலையாயிருந்தது எனவும் மரகதக்கல் கொண்டு செய்யப்பட்ட சிலை எனவும் இரு வேறு கருத்துகள் உள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. நாளை ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை நடைபெறவுள்ள நிலையில் நடை திறக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஆவணி மாத பூஜைகளுக்காக ஆக. 16ம் தேதியும் திருவோண பூஜைகளுக்காக ஆக., 27ம் தேதியும் சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது.