உலக பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் கௌதம் அதானி 2ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்..
ஃபோர்ப்ஸ் உலக பெரும் பணக்காரர் பட்டியலில் இந்திய தொழிலதிபர் மற்றும் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி தற்போது உலகின் இரண்டாவது பணக்காரராக மாறி உள்ளார்.. அதானியின் நிகர சொத்து மதிப்பு இப்போது $155.5 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது.. அதாவது இந்திய மதிப்பில் ரூ.12.37 லட்சம் கோடியாக உள்ளது.
ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி, அதானியின் நிகர மதிப்பு $5.2 பில்லியன் உயர்ந்துள்ளது, இது 3.49 சதவீதம் அதிகரித்துள்ளது… அவர் பிரெஞ்சு அதிபர் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஆகியோரை விட சற்று முன்னிலையில் உள்ளார். டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலின் முதல் 10 இடங்களில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 92.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இந்தியராக உள்ளார். இந்த் பில் கேட்ஸ், லாரி எலிசன், வாரன் பஃபெட், லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்..
கடந்த மாதம் 30-ம் தேதி வெளியான ப்ளூம்பெர்க்கின் பணக்காரர் பட்டியலில், 137.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் அதானி 3வது இடத்தை பிடித்தார்.. ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் ப்ளூம்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலின் முதல் மூன்று இடங்களுக்குள் முதன்முறையாக இடம்பெற்றிருந்தார்..
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா குழுமத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய நிறுவனமாக அதானி குழுமம் இருக்கிறது. துறைமுகங்கள், மின்சாரம், பசுமை ஆற்றல், எரிவாயு, விமான நிலையங்கள் போன்ற துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும். அதானி குழுமம் இப்போது 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்த பிறகு தொலைத்தொடர்பு துறையில் நுழைய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..