fbpx

சூப்பர்… இலவம்பாடி கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு.. இதில் அப்படி என்ன ஸ்பெஷல்..?

உலகில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் தனித்த பாரம்பரியப் பண்புகள், தனித்த அடையாளங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஒரு பொருளின் தனித்தன்மைக்கு, அந்த புவிசார்ந்த இடமும் காரணமாக இருந்தால் அளிக்கப்படும் அந்தஸ்துகளில் ஒன்று புவிசார் குறியீடு. இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். அந்தப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதன் மூலம், அதன் பாரம்பரியம் மற்றும் தனித் தன்மை ஆகியவை பாதுகாக்கப்படுகிறது. இதன் காரணமாகவே புவிசார் குறியீடு அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் ஏற்கனவே 30-க்கும் அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மல்லி, சேலம் மாம்பழம், திருநெல்வேலி அல்வா, திண்டுக்கல் பூட்டு, பழனி பஞ்சார்மிர்தம், காஞ்சிபுரம் பட்டு, சிவகாசி பட்டாசு, ஊத்துக்குளி வெண்ணெய், மணப்பாறை முறுக்கு என தமிழகத்தின் பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் வேலூர் இலவம்பாடி முள் கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இளஞ்சிவப்பு நிறத்துடன் கலந்த ஊதா நிறத்தில் இருக்கும் இந்த கத்திரிக்காய ஒரு அரிய முட்கள் நிறைந்த நாட்டு கத்தரிக்காய் இனமாகும். சராசரியாக ஒரு கத்திரிக்காயின் எடை 40 கிராம் இருக்கும்.. மேலும் இந்த கத்திரிக்காயில் புரதம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை எதிர்க்கும் தனி சக்தி இந்த கத்திரிக்காய் இனத்திற்கு உண்டு.

இந்த கத்திரிக்காயை 140-150 நாட்களில் ஒரு ஹெக்டேருக்கு சுமார் 40-45 டன்கள் மகசூல் தரும். இந்த வகை கத்திரிக்காய் வறட்சி மற்றும் அதிக வெப்பநிலையை தாங்கும் திறன் கொண்டதாகும்.. மேலும் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் வேலூர் உழவர் சந்தை தொடங்கி வைத்த போது, குறிப்பாக வேலூர் முள்ளங்கி கத்தரிக்காயை குறிப்பிட்டு அதன் அரிய குணங்களை விவரித்ததார். அப்போது முதல் கலைஞர் கருணாநிதி சுவைத்து சாப்பிட்ட இலவம்பாடி கத்தரிக்காய் என்றும் பெயர் இதற்கு உண்டு.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட இலவம்பாடி, ஈச்சங்காடு, பொய்கை புதூர் மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 தலைமுறைக்கும் மேலாக முள்ளு கத்தரிக்காய் சாகுபடியை செய்து வருகின்றனர். மேலும் திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்த கத்திரிக்காய் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.. இலவம்பாடி முள் கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Maha

Next Post

புதுவையில் நடுக்கடலில் காவல்துறையினர் திடீர் சோதனை….! காரணம் என்ன…..?

Sun Feb 26 , 2023
புதுவையில் கடலோர காவல் நிலைய காவல்துறையினர் நேற்று புதுச்சேரி கடலோர பகுதிகள் மற்றும் கடலில் திடீரென்று தீவிர சோதனையில் இறங்கினர். இதனை அடுத்து புதுச்சேரி தேங்காய் திட்டு துறைமுகத்திலிருந்து வீராம்பட்டினம், புதுக்குப்பம், நல்லவாடு, பணித்திட்டு, நரம்பை மூர்த்தி குப்பம் வரையில் 12 நாட்டிக்கல் மைல் தூரம் வரையில் சென்று சோதனை செய்தனர் காதல் கண்காணிப்பாளர் பழனிவேல் தலைமையில் காவல்துறையினர் இந்த சோதனையில் இறங்கி இருந்தார்கள். சுருக்கு மடி வளையை பயன்படுத்த […]

You May Like