கர்ப்பத்தின் 13 வது வாரத்திற்குப் பிறகு கருச்சிதைவு ஏற்படும் பெண்களுக்கு, மகப்பேறு விடுப்பு சட்டத்தை ஜெர்மனி பாராளுமன்றத்தின் கீழ் சபை ஒருமனதாக நிறைவேற்றியது. இந்த புதிய ஒழுங்குமுறையானது உடல் மற்றும் உணர்ச்சி ரீதியிலான மீட்சியின் போது பெண்களுக்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சமூக ஜனநாயகவாதிகளின் (SPD) நாடாளுமன்ற உறுப்பினர் சாரா லஹர்காம்ப் கூறினார்.
ஜெர்மனியின் தற்போதைய சட்டங்களின் கீழ், பெண்கள் பொதுவாக பிரசவத்திற்கு ஆறு வாரங்களுக்கு முன்பிருந்தே ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பைப் பெறுகிறார்கள், அதன் பிறகு எட்டு வாரங்களுக்குத் தொடர்கின்றனர். எவ்வாறாயினும், கருச்சிதைவு ஏற்பட்டால் இந்த விதி முன்பு பொருந்தாது. புதிய விதிகளின் படி, கர்ப்பத்தின் 13 வது வாரத்தில் இருந்து கருச்சிதைவு ஏற்படும் பெண்களுக்கு இப்போது மகப்பேறு விடுப்பு எடுக்க விருப்பம் உள்ளது. இருப்பினும், பெண்கள் விரும்பாவிட்டால் அதை எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.
கர்ப்பத்தின் 13 மற்றும் 24 வது வாரங்களுக்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும் ஜெர்மனியில் சுமார் 6,000 கருச்சிதைவுகள் ஏற்படுவதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. 12 வது வாரத்திற்கு முன் சுமார் 84,000 கருச்சிதைவு ஏற்படுவதாக அந்த மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 13 வது வாரத்திற்கு பிறகு கருச்சிதைவு ஏற்படும் பெண்களுக்கு மகப்பேரு விடுமுறை அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Read more : செய்தியாளர்களை வாட்ஸ் ஆப் மூலம் உளவு பார்க்கும் இஸ்ரேல் நிறுவனம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!