ஒடிசா ரயில் விபத்தையடுத்து, டிக்கெட் முன்பதிவின்போது பயணிகள் காப்பீடு பெறுவது அவசியம் என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அண்மையில் ஒடிசாவில் நடந்த மிகப் பெரிய ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில், அதில் சிலர் மட்டுமே காப்பீடு பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் டிக்கெட் முன்பதிவின்போது பயணிகள் காப்பீடு பெறுவது அவசியம் என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, IRCTC இணையதளம் மற்றும் செயலி வழியே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.35 பைசாவிலேயே ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
அதாவது, முன்பதிவின் போது காப்பீடு பெற்றவர்கள் ரயில் பயண விபத்தில் இறந்தால் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படுகிறது. இவ்விபத்தின் காரணமாக நிரந்தர ஊனம் ஏற்பட்டாலும் பாதிப்படைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பகுதி உடல் ஊனம் ஏற்பட்டால் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரையிலும், காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் ரூபாய் 2 லட்சம் வரையிலும் மருத்துவ காப்பீட்டு வசதியானது செய்து கொடுக்கப்படுகிறது.
ஆகவே கண்டிப்பாக ரயில், பேருந்து என அனைத்து பயணத்தின்போதும் கட்டாயமாக டிக்கெட் முன்பதிவின் போது பயனாளர்கள் காப்பீடு எடுத்துக்கொள்ள வேண்டும். இருப்பினும் இந்த காப்பீடு தொகை திட்டம் முன்பதிவு டிக்கெட் எடுப்பவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுவதாகவும், விபத்து காப்பீட்டு வசதி முன்பதிவில்லா டிக்கெட் பயணிகளுக்கும் வழங்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.