மத்திய மாநில அரசுகளை விமர்சித்து வைக்கப்பட்ட பேனரில் விஜய் கையெழுத்திட்டு, #GetOut கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (பிப்.26) தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம், சுற்றுப்பயணம், தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தவெகவின் 2ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக 2,500 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே விழாவுக்கு அனுமதிக்கப்படுவார்கள். தவெக சார்பில் 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு மாவட்டத்திற்கு 15 பேர் என்ற அளவில் சுமார் 2,500 பேர் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சி அரங்கத்திற்கு வருகை தந்த விஜய் தொண்டர்களுக்கு கை அசைக்க அரங்கமே அதிர்ந்தது.. நிகழ்ச்சி மேடையில் தவெக தலைவர் விஜய், பிரசாந்த் கிஷோர், ஆனந்த் அர்ஜூனா, புஸ்லி ஆனந்த் உள்ளிட்டோர் வருகை தந்தனர். தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை விமர்சித்து வைக்கப்பட்ட பேனரில் விஜய் கையெழுத்திட்டு, #GetOut கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரும் பேனரில் கையெழுத்திட்டனர்.
Read more:தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் குளறுபடி.. நிற்க கூட இடமில்லை என தொண்டர்கள் கதறல்..!!