fbpx

தெரியாத எண்ணில் இருந்து நிர்வாண வீடியோ கால் வருகிறதா..? அப்ப ஜாக்கிரதையாக இருங்க..

இந்த நவீன காலக்கட்டத்தில் இணைய மோசடிகள் சர்வ சாதாரணமாகிவிட்டன. சைபர் குற்றவாளிகள் பல்வேறு நூதன வழிகளில் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.. அந்த வகையில் வீடியோ அழைப்புகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.. இந்த ஆண்டின் தொடக்க அறிக்கைகளின்படி, பலர் சீரற்ற எண்களிலிருந்து வீடியோ அழைப்புகளைப் பெற்றனர்.. இந்த வீடியோ கால் மூலம் மக்களை ஏமாற்றி, ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட படங்களைப் பயன்படுத்தி அவர்களை அச்சுறுத்தி பணம் பறித்த சம்பவங்கள் பல அரங்கேறி உள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதுபோன்ற பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

மோசடி செய்பவர்கள் பெண்கள் வீடியோ அழைப்பை மேற்கொள்கின்றனர். குறிப்பிட்ட நபர் தொலைபேசியில் பதிலளிக்கும் போது, ​​​​அவரை ஒரு அரை நிர்வாண பெண் வீடியோ அழைப்பில் வரவேற்கிறார். பாதிக்கப்பட்டவர் பதில் அளித்தால், மோசடி செய்பவர்கள் வீடியோக்களை பதிவு செய்வார்கள் அல்லது ஸ்கிரீன் ஷாட்களை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டுவார்கள். புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிடுவதைத் தவிர்ப்பதற்காக பாதிக்கப்பட்டவர் பெரும் தொகையை செலுத்த வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

டேட்டிங் பயன்பாடுகள் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பிற வீடியோ அழைப்பு சேவைகளில் இத்தகைய மோசடிகள் பரவலாக உள்ளன. அந்த வகையில் சமீபத்தில் இது போன்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது.. 30 வயதுடைய நபர் ஒருவர் ரேண்டம் வீடியோ அழைப்பிற்காக ரூ.55,000 பணத்தை இழந்துள்ளார்..

எனவே இது போன்ற மோசடிகளீல் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம், தெரியாத எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஒருபோதும் ஏற்கக்கூடாது. பயனர்கள் தங்கள் தனியுரிமை அமைப்புகளை மாற்றியமைக்க மற்றும் உயர்ந்த அளவிலான பாதுகாப்பை பராமரிக்க விருப்பம் உள்ளது. எந்த ஆன்லைன் பிளாட்ஃபார்மிலும், உங்கள் ஃபோன் எண், பிற கணக்கு ஐடிகள் மற்றும் உங்கள் தொடர்புகள் பட்டியலை எவரும் அணுகக்கூடிய நிலையில் வைத்திருக்க கூடாது. அடையாளம் தெரியாத மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்காமல் இருப்பதன் மூலமும் மோசடிக்கு ஆளாகாமல் தப்பிக்க முடியும்..

Maha

Next Post

’சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்கும் திமுக அமைச்சர்கள்’..! எடப்பாடி பழனிசாமி காட்டம்

Tue Sep 13 , 2022
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடத்தும் லஞ்ச ஒழிப்பு சோதனை என்பது எதிர்கட்சியினர் மீது நடத்தும் நாடகம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் எதிர்க்கட்சியினரின் குரல்களை நசுக்குதல் போன்ற தீய செயல்களில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. பெண்களுக்கு எதிராக உரிமைத் தொகையினை வழங்காதது முதல் மாணவர்களின் கல்விக் கட்டணம் ரத்து […]
’கல்வி கிடைத்தால் ஓட்டு கிடைக்காது’..! மடிக்கணினி திட்டத்தை நிறுத்தியதற்கு இதுதான் காரணம்.!

You May Like