fbpx

கொடூரம்.. பாத்திரத்தில் சிறுநீர் கழித்து சப்பாத்தி செய்த பணிப்பெண்..!! கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படும் குடும்பத்தினர்.. அதிர்ச்சி வீடியோ

காஜியாபாத்தில் சிறுநீரைக் கொண்டு உணவு தயாரித்த பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தனது குடும்பத்துடன் கிராசிங் ரிபப்ளிக் பகுதியில் வசித்து வருகிறார். தொழிலதிபரின் குடும்பத்தினர் சில நாட்களாக கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்தனர். மருத்துவ சிகிச்சை பெற்றும் அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் உணவில் தவறு நடத்திருக்க வாய்ப்பு இருப்பதாக நினைத்து சமையல் அறையில் ரகசிய கேமராவை நிறுவினார்.

அதனைத்தொடர்ந்து கேமராவில் பதிவான ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ரீனா என்ற பணிப்பெண் கடந்த 8 ஆண்டுகளாக தொழிலதிபர் வீட்டில் வேலை செய்து வருகிறார். இவர் அக்டோபர் 14, திங்கட்கிழமை, வழக்கம் போல் சமையல் செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த பெண் சமையல் பாத்திரங்களில் சிறுநீர் கழிப்பதையும், சிறுநீரைக் கொண்டு சப்பாத்திக்கு மாவு பிசையும் காட்சிகளையும் கண்டு திகிலடைந்தார்.

பின்னர் அந்த ஆதாரங்களை எடுத்துக் கொண்டு காசியாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விரைந்து செயல்பட்டு ரீனாவை கைது செய்தனர். விசாரணையின் போது, ​​ரீனா குற்றச்சாட்டுகளை முதலில் மறுத்துள்ளார். பின்னர் வீடியோ ஆதாரங்களை காட்டிய பின்பு குற்றத்தை ஒப்புக்கொண்டார். ​​​​தொழிலதிபரின் மனைவியின் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறுகையில், “இவ்வளவு காலம் தங்களிடம் பணிபுரிந்த ரீனாவை நாங்கள் ஒரு போதும் சந்தேகிக்கவில்லை. வீட்டில் திருட்டுச் சம்பவம் நடந்த போது கூட அவரை நாங்கள் சந்தேககிக்கவில்லை. அவரின் இந்த செயல் எங்களுக்கு அதிர்ச்சியையும், அவ நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. இந்தச் சம்பவம் எங்கள் குடும்பத்தினரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது” என்றார்.

English Summary

Ghaziabad: Family, Suffering From Liver Problem, Catches Cook Mixing Her Urine In Their Food; Shocking Video Surfaces

Next Post

சட்டம் படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் வேலை வாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது ?

Wed Oct 16 , 2024
TNPSC has released notification to fill the posts of Government Assistant Case Manager. What are the qualifications for these posts? How to apply? Information including is can be seen in this post.

You May Like