fbpx

மது குடிக்க வைத்து சீரழிக்கப்பட்ட 16 வயது சிறுமி.! அதிரடி தீர்ப்பு வழங்கிய போக்சோ நீதிமன்றம்.!

கேரள மாநிலத்தில் 16 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் மூன்று இளைஞர்களுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக கொயிலாண்டி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே 16 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பீர் அருந்த வைத்து மூன்று இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவினாஷ், அஸ்வந்த் மற்றும் சுபின் ஆகிய மூன்று பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொயிலாண்டி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இது தொடர்பான தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியிருக்கிறார். அதன்படி குற்றவாளிகளான அவினாஷ் அஸ்வந்த் மற்றும் சுபின் ஆகியோருக்கு 25 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றவாளிகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 16 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் வெளியாகியிருக்கும் தீர்ப்பு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

ஹைய்யா.! இனி பள்ளிகளுக்கும் வரப்போகுது 'ஒரே தேசம் ஒரே ஸ்டுடென்ட் ஐடி'.! இதன் சிறப்புகள் என்ன.? சூப்பரான அறிவிப்பு.!

Sun Dec 24 , 2023
2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின்படி ஒரே தேசம் ஒரே மாணவர் ஐடி திட்டம் இன்று மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. தேசம் முழுவதும் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அதார் அடையாள எண் போன்று மாணவர்களுக்கு தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவேட்டை மத்திய அரசு உருவாக்கியது. இதன்படி மாணவர்களுக்கு 12 இலக்கங்களைக் கொண்ட தனித்துவமான அடையாள எண் உருவாக்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் கல்வி மற்றும் சாதனைகளை கண்காணிக்க முடியும் […]

You May Like