நேற்று அதிகாலை ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்ப்பூரில் தன்னுடைய காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி அவருடைய காதலன் முன்னிலையில், 3 கல்லூரி மாணவர்களால் கொடூரமான முறையில், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. 3 குற்றவாளிகள் சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டதாக ராஜஸ்தான் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தன்னுடைய சொந்த ஊரான ஜோத்பூரில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாநில காவல்துறை தலைமை இயக்குனர் உமேஷ் மிஸ்ராவிடம் தெரிவித்துள்ளார். அதோடு, குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தி இருக்கிறார். குற்றம் சுமத்தப்பட்டவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து இருப்பது பாராட்டுக்குரியது என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு மிக கடுமையான தண்டனை வழங்குவதன் மூலமாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியை தம்முடைய அரசு உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் அஜ்மீரில் இருந்து தன்னுடைய காதலனுடன் சிறுமி தப்பிச் சென்றுள்ளார். அவர்கள் பேருந்தில் சென்று இரவு 10:30 மணி அளவில் ஜோத்ப்பூரை அடைந்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் அரை எடுப்பதற்காக விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு பராமரிப்பாளர் பொறுப்பில் இருந்த சுரேஷ் ஜாக் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதை தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர் என்று துணை காவல்துறை ஆணையர் அம்ரிதா துகான் தெரிவித்துள்ளார். அதன் பிறகு இருவரும் பௌடா சௌராஹாவுக்கு சென்றுள்ளனர். அங்கே குற்றம் சுமத்தப்பட்ட சமந்தர்சிங்பதி, தர்ம பால்சிங் மற்றும் பட்டம் சிங் உள்ளிட்ட மூவரும் அவர்களை அணுகியதாக காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்டவர் சிறுமி மற்றும் அவருடைய காதலனுடன் நட்பாக பழகி, அவர்களுக்கு உணவு மற்றும் குளிர்பானங்களை வழங்கி இருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமியும் அவருடைய காதலரும் தங்களைப் பற்றி குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் தெரிவித்தபோது, 3 பேரும் அவர்களுக்கு உதவி புரிவதாக தெரிவித்துள்ளனர்.
பின்பு அதிகாலை 4 மணி அளவில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அவர்களை தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்து செல்வதாக தெரிவித்து, ஜெய் நாராயண் வியாஸ் பல்கலைக்கழகத்தின் பழைய வளாகத்தின் இருக்கின்ற ஹாக்கி மைதானத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்று துகான் தெரிவித்துள்ளார். மைதானத்தை வந்து அடைந்த பின்னர் அவர்கள் சிறுவனை அடித்து பிணை கைதியாக வைத்துள்ளனர். அதன் பின்னர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் காலை வேளையில் நடை பயிற்சிக்கு செல்பவர்கள் அங்கு வந்ததால் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். சிறுமியின் காதலன் நடை பயிற்சி செல்வவர்களிடம் உதவி கேட்டுள்ளார், அதன் பிறகு காவல்துறை தகவல் வழங்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களுக்கு பின்னர் ஜோத்பூரின் ரத்த நாடா அருகே, கணேஷ் புராவில் இருக்கின்ற ஒரு வீட்டில் குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் காவல்துறையிடம் இருந்து தப்பி செல்ல முயற்சி செய்தனர். இருந்தாலும் அவர்கள் கீழே விழுந்ததில், காயம் அடைந்தனர். அவர்களில் 2️ பேர் தப்பிச்செல்ல முயற்சித்த போது கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 3வது ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதற்காக விடுதியில் பராமரிப்பாளரையும் கைது செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.