இந்த உலகத்தில் ஏராளமான பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியின் மரபு, காலநிலை, வாழ்வியல் முறைக்கு ஏற்ப அவை மாறுபடும். அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான வழக்கத்தை பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.
நியூசிலாந்தின் கார்டோனா பகுதிக்கு வரும் பெண்கள் தங்களின் பிராவை கழட்டி அங்குள்ள இரும்பு வேலியில் தொங்கவிட்டு செல்கின்றனர். அவ்வாறு அங்கு ஏராளமான உள்ளாடைகள் தொடங்கவிடப்பட்டுள்ளன. கார்டோனா நியூசிலாந்தின் மத்திய ஒடோகோவில் உள்ள ஒரு பகுதி. பிரா வேலி காரணமாக இந்த பகுதி மிகவும் பிரபலமடைந்துள்ளது. இங்கு வரும் பெண்கள் வேலியின் முன் நின்று தாங்கள் அணிந்திருக்கும் உள்ளாடைகளை கழட்டி வேலியில் தொங்கவிட்டுச் செல்கின்றனர்.
இதன் காரணமாக அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நியூசிலாந்தின் முக்கிய சுற்றுலா தளமாகவே பிரா வேலி மாறியுள்ளது. பெண்கள் இப்படி தங்கள் உள்ளாடைகளை இங்கு தொங்கவிட ஒரு காரணம் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, இங்குள்ள கம்பி வேலியில் உள்ளாடையை தொங்கவிட்டால் தாங்கள் விரும்பும் நபர் வாழ்க்கை துணையாக கிடைப்பார் என்பது நம்பிக்கையாம். இதனால் தான், அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
1999ஆம் ஆண்டில் முதன்முதலில் அங்கு 4 உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர். அவற்றை அங்கு தொங்கவிட்டது யார் என்று தெரியவில்லை. ஆனால், நாளடைவில் அங்கு ஏராளமான உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டன. அதனை பார்த்த சில பெண்கள், அவர்களும் தங்கள் உள்ளாடைகளை தொங்கவிட்டனர். இவ்வாறு அந்த வேலியில் உள்ளாடைகளை தொங்கவிடுவது வழக்கமாகிவிட்டது. அதுமட்டுமன்றி சில மாதங்களுக்கு முன்பு வேலியில் தொங்கவிடப்பட்ட உள்ளாடைகள் திருடப்பட்டுள்ளன. இதனால், அந்த பகுதி மேலும் பிரபலமடைய ஆரம்பித்துள்ளது. முன்னதாக அப்பகுதி மக்கள் மட்டும் இதை செய்துவந்த நிலையில், தற்போது ஏராளமான வெளிநாட்டு பயணிகளும் வேலியில் உள்ளடையை தொங்கவிட்டுச் செல்கின்றனர்.
Read More : பிரச்சாரத்தின்போது திடீரென மயங்கி விழுந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி..!! பெரும் பரபரப்பு..!!